Advertisement

ஐபிஎல் 2022: 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!

மஹாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரில் 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement
IPL 2022: BCCI likely to allow 50 pc crowd in stadiums from next week
IPL 2022: BCCI likely to allow 50 pc crowd in stadiums from next week (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 01, 2022 • 06:03 PM

ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26இல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறுகின்றன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 01, 2022 • 06:03 PM

ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 தொடருக்க்கு 25 விழுக்காடு ரசிகர்களை அனுமதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. 

Trending

ஏப்ரல் 15 வரை 25 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும், அதன்பிறகு கரோனா பரவலின் பாதிப்பைக் கொண்டு கூடுதல் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐயும் மஹாராஷ்டிர அரசும் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக வெகுவாக குறைந்து வரும்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏப்ரல் 2 முதல் கட்டாய முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே தெரிவித்தாா்.

மஹாராஷ்டிரத்தில்  கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரில் 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்கான டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் இணையத்தளமான புக்மை ஷோ நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

மைதானங்களில் 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியை ஏராளமான ரசிகர்கள் நேரில் காண முடியும் என்று தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement