Advertisement

ஐபிஎல் 2022: 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ஜிம்பாப்வே வீரர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளசிங் முசரபானி ஒப்பந்தமாகியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 22, 2022 • 12:20 PM
IPL 2022: Blessing Muzarabani will be joining Lucknow Super Giants!
IPL 2022: Blessing Muzarabani will be joining Lucknow Super Giants! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள சூழலில் பல அணிகளிலும் வீரர்கள் வெளியேறி வருகின்றனர். குஜராத் அணியில் இருந்து ஜேசன் ராய், மும்பை அணியில் இருந்த் ஜோஃப்ரா ஆர்ச்சர் என அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினர்.

இதில் லக்னோ அணியின் நம்பிக்கை வீரராக இருந்த மார்க் வுட்-ம் வெளியேறுவதாக அறிவித்தார். வலதுகை முட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மார்க் வுட் அவதிப்பட்டு வருவதாகவும், குணமடைய சில காலம் ஆகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. அவரை நம்பி ரூ. 7.5 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. எனவே உடனடியாக அதே தொகைக்கு தகுதியுடைய ஒரு பவுலரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

Trending


இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது வுட்டிற்கு பதிலாக வங்கதேசத்தை சேர்ந்த டஸ்கின் அகமது-ஐ ஒப்பந்தம் செய்யவுள்ளனர். இதற்காக டஸ்கினுடம் பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. வங்கதேச வாரியம் மற்றும் வீரரின் முடிவுக்காக மட்டுமே தற்போது லக்னோ அணி காத்துள்ளது என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் டஸ்கின் அஹ்மத் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வழங்க மறுத்துள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. இதனால் மார்க் வுட்டிற்கான சரியான மாற்றுவீரரை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி ஜிம்பாப்வே இளம் புயலை அணிக்குள் இழுத்துள்ளது.

அதன்படி ஜிம்பாப்வே அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பிளசிங் முசரபானியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியாம் நேற்று அறிவித்ததது.

இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் டெய்லர் கடந்த 2014ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement