ஐபிஎல் திருவிழா 2022: சிஎஸ்கே vs கேகேஆர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் ஐபிஎல் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளை வான்கேடே மைதானத்தில் தொடங்குகிறது. மேலும் நடப்பு சீசனில் லக்னோ, குஜராத் அணிகள் இணைந்துள்ளதால் மொத்தம் 74 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம் : வான்கேடே மைதானம், மும்பை.
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஐபிஎல் தொடர் ஆரம்பமானது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் மட்டுமே விளையாடி வந்தது. இந்நிலையில் தோனி நேற்றைய தினம் தனது பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்குவதாக அறிவித்து, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இருப்பினும் ரவீந்திர ஜடேஜா அப்பதவிக்கு தகுதியானவரே என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புதிய கேப்டனுடன் களமிறங்கும் சிஎஸ்கே அணிக்கு பெரும் சிக்கலாக தீபக் சஹார் மற்றும் மொயீன் அலி இருவரும் நாளைய போடியில் களமிறங்க மாட்டார்கள் என்பது தான்.
இதில் தீபக் சஹார் நடப்பு சீசனில் விளையாடுவது முற்றிலும் சந்தேகமாகியுள்ளது. அவருக்கு மாற்றுவீரரைத் தேர்வு செய்யும் முனைப்பில் சிஎஸ்கே அணி தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் டேவன் கான்வே, ஆடம் மில்னே போன்றோர் புதிதாக சிஎஸ்கே அணியில் இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது.
அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் காண்கிறது. இதற்காகவே அவரை ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் போட்டி போட்டு கேகேஆர் அணி வாங்கியது.
மேலும் வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், முகமது நபி என நட்சத்திர ஆல்ரவுண்டர்களை வைத்திருப்பதால் இது நிச்சயம் சென்னை அணிக்கு பெரும் சவாலாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்பதால், அவரது இடத்தில் அஜிங்கியா ரஹானே அல்லது நிதீஷ் ராணா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 26
- சிஎஸ்கே வெற்றி - 17
- கேகேஆர் வெற்றி - 8
- முடிவில்லை - 1
உத்தேச அணி
சிஎஸ்கே - ருதுராஜ் கெய்க்வாட், டேவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் டுபே, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ராஜ்வர்தன் ஹங்ரேக்கர், ஆடம் மில்னே.
கேகேஆர் - வெங்கடேஷ் ஐயர், அஜிங்கியா ரஹானே, ஸ்ரெயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சௌதி, சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - சாம் பில்லிங்ஸ், எம் எஸ் தோனி
- பேட்ஸ்மேன்கள் - நிதீஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே
- ஆல்ரவுண்டர்கள்- ஆண்ட்ரே ரஸ்ஸல், ரவீந்திர ஜடேஜா
- பவுலர்கள் - வருண் சக்ரவர்த்தி, ராஜ்வர்தன் ஹங்ரேக்கர், ஆடம் மில்னே
Win Big, Make Your Cricket Tales Now