
IPL 2022: CSK training day and night; Coaches separate focus! (Image Source: Google)
ஐபிஎல் 14ஆவது சீசனில் கெத்தாக விளையாடி கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15ஆவது சீசனில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த பின்னடைவுக்கு முதன்மை காரணம், கேப்டன்ஸி மாற்றம்தான். முதல் லீக் போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தோனி திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார்.
இதுதவிர தீபக் சஹார் இல்லாதது, தொடக்க வீரர் ருதுராஜ் சொதப்பல், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவது போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. இந்நிலையில், இந்த பிரச்சினையை சரிசெய்ய சிஎஸ்கே நிர்வாகம், தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ருதுராஜுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மனநல ஆலோசகரிடம் பேசவைத்து, தற்போது பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். ருதுராஜும் தற்போது பயிற்சியில் காட்டடி அடித்து வருகிறார்.