Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022:  பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் இன்று பயிற்சியைத் தொடங்கியது.

Advertisement
IPL 2022: CSK’s training camp starts in Surat
IPL 2022: CSK’s training camp starts in Surat (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 07, 2022 • 09:56 PM

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி வரும் மே 29ஆம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிதாக 2 அணிகள் புதிதாக பங்கேற்பதையடுத்து, 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 07, 2022 • 09:56 PM

இம்முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளதால் அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பார்மட் அடிப்படையில் லீக் சுற்றில் மோதவுள்ளன. இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பைகளை வென்றுள்ளது மற்றும் எத்தனை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது என்பதன் அடிப்படையில் இந்தப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.

Trending

குறிப்பாக வரும் மார்ச் 26ஆம் தேதியன்று துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் 4 கோப்பைகளை வென்றுள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஐபிஎல் தொடங்க இன்னும் சுமார் 20 நாட்கள் உள்ள நிலையில் மும்பை, பெங்களூரு ஆகிய இதர அணிகளை காட்டிலும் இத்தொடருக்கான பயிற்சியை முன்கூட்டியே சென்னை தொடங்கியுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த பயிற்சியில் கேப்டன் எம்எஸ் தோனி, ருதுராஜ் கைக்வாட், அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா உள்ளிட்ட அந்த அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். 

இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக சூரத் நகரை சென்றடைந்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அடங்கிய பேருந்தை அங்கு உள்ள ரசிகர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று வரவேற்றது சமூகங்களில் வைரலாகி வருகிறது.

 

குறிப்பாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். இருப்பினும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் காயமடைந்த அவர் சென்னை அணி பங்கேற்கும் இந்த பயிற்சியில் களமிறங்கவில்லை. அவரின் காயம் பற்றி முழு தகவல் வெளிவராத நிலையில் இந்த தொடரில் அவர் பங்கேற்காமல் போனால் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement