
IPL 2022: Delhi Capitals beat Kolkata Knight Riders by 4 wickets (Image Source: Google)
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், கேகேஆர் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியுள்ளன.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆரோன் ஃபின்ச்சை 2ஆவது ஓவரிலேயே வெறும் 3 ரன்னுக்கு போல்டாக்கி அனுப்பினார் சேத்தன் சகாரியா. அதன்பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருமே தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திரஜித்தை வீழ்த்திய சுனில் நரைன், அதற்கடுத்த பந்திலேயே சுனில் நரைனை டக் அவுட்டாக்கி அனுப்பினார்.