Advertisement

ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 05, 2022 • 23:55 PM
IPL 2022: Delhi Capitals Defeat Sunrisers Hyderabad By 21 Runs
IPL 2022: Delhi Capitals Defeat Sunrisers Hyderabad By 21 Runs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய டெல்லிகேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய மிட்செல் மார்ஷ் 10ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 16 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

Trending


9 ஓவரில் 85 ரன்களுக்கு டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். தனது பழைய அணியான சன்ரைசர்ஸுக்கு எதிராக கங்கனம் கட்டி அடித்து ஆடினார் வார்னர். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் ஆரம்பத்தில் நிதானம் காத்து பின்னர் டெத் ஓவர்களில் காட்டடி அடித்தார். 

சீன் அபாட் வீசிய 17வது ஓவரில் 2 சிக்ஸர் விளாசிய பவல், உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார். வார்னர் 58 பந்தில் 92 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தாலும், அவரால் சதமடிக்க முடியவில்லை. பவல் 35 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களை விளாச, 20 ஓவரில் 207 ரன்களை குவித்தது.

இதையடுத்து 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் ராகுல் திரிபாதியும் 22 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் - ஐடன் மார்க்ரம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். ஆனாலும் 62 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணியின் தோல்வியும் உறுதியானது.

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement