ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக், ஷபாஸ் அஹ்மத் அதிரடியில் ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழந்து மற்றுமொரு முறை ஏமாற்றமளித்தார். நன்றாக ஆடிய தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Trending
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ஜோஸ் பட்லருக்கு சரியாக ஷாட்டுகள் கனெக்ட் ஆகாமல் திணறினார். ஆகாஷ் தீப்பின் பவுலிங்கில் ஒரே ஓவரில் 2 கேட்ச்களை பட்லருக்கு தவறவிட்டனர் ஆர்சிபி வீரர்கள். பட்லருக்கு ஷாட் கனெக்ட் ஆகாததால் அணியின் ஸ்கோர் உயரவேயில்லை.
18 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ராஜஸ்தான் அணி. ஆனால் கடைசி 2 ஓவரில் பட்லர் அடி வெளுத்துவிட்டார். 19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்த பட்லர், கடைசி ஓவரிலும் 2சிக்ஸர்கள் அடித்தார். பட்லர் 47 பந்தில் 70 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 169 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. பட்லரின் அதிரடியால் கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 42 ரன்கள் கிடைத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - அனுஜ் ராவத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
பின் டூ பிளெசிஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 26 ரன்களுக்கு அனுஜ் ராவத்தும் விக்கெட்டை இழந்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதற்கடுத்த பந்திலேயே டேவிட் வில்லி கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ரூதர்ஃபோர்டும் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷபாஸ் அஹ்மத் - தினேஷ் கார்த்திக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் ஆர்சிபியின் வெற்றியும் ஏறத்தாழ உறுதியானது.
பின் 45 ரன்களில் ஷபாஸ் அஹ்மத் போல்டாக போட்டியில் அனல் பறந்தது. ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்தில் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கால் இருந்த தினேஷ் கார்த்தி 44 ரன்களைச் சேர்த்தார்.
Win Big, Make Your Cricket Tales Now