ஐபிஎல் 2022: ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த டிக்கெட் விலை!
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலையை அதிகபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயித்து ரசிகர்களுக்கு பிசிசிஐ அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் 100 சதவீத பார்வையாளர்களை பிளே ஆப் சுற்று முதல் அனுமதிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.
இதனையடுத்து முதல் முறையாக ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களக்கு மேல் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
Trending
இந்த நிலையில், ஐபிஎல் அணிகளுக்கும், பிசிசிஐக்கும் பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம், கரோனா அச்சுறுத்தலால் வரவில்லை. இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலையை பிசிசிஐ கடுமையாக உயர்த்தியுள்ளது.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 800 ஆக பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் 2000 ரூபாய், 2500 ரூபாய் என டிக்கெட் விலை தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் 3500 ரூபாய் என்றும். 4500 ரூபாய் என்றும், 7500 ரூபாய் என்றும் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போன்று அதிக படியான விலையாக 14 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம், ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதிகப்படி விலையாக 60 ஆயிரம் ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்தபட்ச டிக்கெட் விலை 250 ரூபாய், 500 ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை இருந்த டிக்கெட் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் விலை உயர்வுக்கு காரணம், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி மற்றும் மாநில அரசின் வரிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. வரிகளையும் டிக்கெட் செலவில் சேர்த்து இருப்பதால் தான் இவ்வளவு அதிக விலைக்கு விற்க வேண்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புதிய மைதானம் கட்ட பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணத்தை திரும்ப பெற, டிக்கெட் மூலம் தான் வருமானத்தை ஈட்ட முடியம் என்பதும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now