Advertisement

ஐபிஎல் 2022: அரைமணி நேரம் தாமதமாகும் இறுதிப்போட்டி!

15ஆவது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 19, 2022 • 20:36 PM
IPL 2022 Final To Start At 8 PM In Narendra Modi Stadium, Ahmedabad
IPL 2022 Final To Start At 8 PM In Narendra Modi Stadium, Ahmedabad (Image Source: Google)
Advertisement

வரும் 29ஆம் தேதி அன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 70 லீக் போட்டிகள் கொண்ட இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் தான் லீக் சுற்றில் எஞ்சியுள்ளன.

ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் வரும் ஞாயிறு அன்று விளையாடும் போட்டிதான் கடைசி லீக் போட்டி. பிளே-ஆஃப் சுற்றில் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மற்றும் குவாலிஃபையர் போட்டிகள் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Trending


அதில் இறுதிப் போட்டியை முன்னிட்டு நடைபெறும் நிறைவு விழா காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விழா நடத்தப்பட உள்ளதாம். இதில் இந்திய கிரிக்கெட்டின் பயணம் குறித்த சிறப்புக் காட்சிகள் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு முன்னதாக 45 நிமிடங்கள் நிறைவு விழா நடத்தப்பட உள்ளதாம். அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 07:30 மணி அளவில் டாஸ் வீசப்படும் என்றும், 08:00 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement