
IPL 2022: Franchises unhappy with Mumbai Indians getting to play at Wankhede (Image Source: Google)
கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. அதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்றின் காரணமாக, முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து தான் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த முறை அனைத்து போட்டிகளும், இந்தியாவில் தான் நடைபெறும் என்பதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதனால், 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு, முழுமையாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் இது தான் என்றும் கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 70 போட்டிகளில், 55 போட்டிகள், மும்பையின் மூன்று மைதானங்களான வான்கடே, பிராபவுர்ன் மற்றும் டிஒய் பாட்டில் மைதானங்களிலும், மீதமுள்ள 15 போட்டிகளை புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.