
IPL 2022: Gujarat Titans finishes off 168/5 on their 20 overs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லின் அபாரமான கேட்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த சஹா - மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் வேட் 16 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுபுறம் அதிரடியாக விளையாடிவந்த விருத்திமன சஹாவும் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.