
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டை பெற்று வருகிறது. ஏனெனில் மும்பை அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டராக இருந்து வந்த பாண்டியா பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்துள்ளார்.
ஆனால் அவரை மும்பை அணி காயம் காரணமாக இந்த ஆண்டு அணியில் இருந்து வெளியேற்றியது. அதன் பின்னர் மெகா ஏலத்தில் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா முன்னதாகவே குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டது மட்டுமின்றி அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.
அப்படி புதிய கேப்டனாக பதவியேற்ற ஹர்டிக் பண்டியா தலைமையிலான குஜராத் அணி எவ்வாறு செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று அசத்திய குஜராத் அணி நேற்று பலம்வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது.