Advertisement

ஐபிஎல் மெகா ஏலம் 2022: கடும் போட்டிகளுக்கு இடையே இஷான் கிஷானை மீட்டது மும்பை!

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ரூ. 15.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Bharathi Kannan
By Bharathi Kannan February 12, 2022 • 17:05 PM
IPL 2022: Ishan Kishan goes to Mumbai Indians for Rs 15.25 cr
IPL 2022: Ishan Kishan goes to Mumbai Indians for Rs 15.25 cr (Image Source: Google)
Advertisement

இந்திய அணிக்காக 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் இஷான் கிஷன். 2020 ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வானார். 

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனைத் தேர்வு செய்ய மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே கடும்போட்டி ஏற்பட்டது. இறுதியில் இஷான் கிஷனை ரூ. 15.25 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி. 

Trending


ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான இந்திய வீரர், யுவ்ராஜ் சிங். ரூ. 16 கோடி. இப்போது, ரூ. 15.25 கோடிக்குத் தேர்வாகி அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் இஷான் கிஷன். மேலும் ஐபிஎல் ஏலத்தில் முதல்முறையாக மும்பை அணி ரூ. 10 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஒரு வீரரைத் தேர்வு செய்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement