
IPL 2022: Jonny Bairstow , Liam Livingstone's fifty helps Punjab Kings post a total on 209/9 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 60ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் - ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தவான் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்களைக் குவித்தது.