
ஐபிஎல் 2022 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விலங்கிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அவர் 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவரையும் அவர் வீசியிருந்தால் 5 விக்கெட்டை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் பந்து ஈரமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியதாக அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் குல்தீப் யாதவ் 8 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சாஹால் உள்ளார். இவர் 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.