ஐபிஎல் 2022: லிவிங்ஸ்டோன் காட்டாடி; சிஎஸ்கேவுக்கு 181 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்இ பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகேப்டன் ஜடேஜா பந்துவீசுவதாக அறிவித்தார். முதல் ஓவரை இந்திய வீரர் முகேஷ் சௌத்ரி வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மயங்க் அகர்வால், அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
Trending
இதனையடுத்து , 2ஆவது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜோர்டன் வீசினார் முதல் பந்தே சிக்சருக்கு சென்றது இதன் அடுத்த பந்தே தோனி ஒரு சம்பவத்தை செய்தார். ராஜபக்சே அடித்த பந்து, ஜோர்டனே ஓடி வந்து பிடித்தார். அதற்குள் ரன் ஓடிவிடலாம் என நினைத்த ராஜபக்சா, மீண்டும் பாதியில் நின்று மிண்டும் நின்ற முனைக்கே திரும்பினார்.
இதனை பார்த்த ஜோர்டன் பந்தை தூக்கி தோனியிடம் வீசினார். அதற்குள் தோனி ஸ்டம்பை நோக்கி ஓடி பந்தை பிடித்து பாய்ந்து ரன் அவுட் செய்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - லியாம் லிவிங்ஸ்டோன் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின் 60 ரன்கள் எடுத்திருந்த லிவிங்ஸ்டோன், ஜடேஜா பந்துவீச்சில் அம்பத்தி ராயூடுவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஜித்தேஷ் சர்மா, 3 சிக்சர்களை பறக்க விட்டு 27 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கான், ஓடின் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் கிறிஸ் ஜோர்டன், டுவைன் பிரிட்டோரியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now