ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றனர். புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டி காக்கும் தீபக் ஹூடாவும் சேர்ந்து அபாரமாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 85 ரன்களை சேர்த்தனர். டி காக் 46 ரன்னிலும், தீபக் ஹூடா 34 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த அனைத்து பேட்ஸ்மேன்களுமே சொதப்பினர்.
Trending
க்ருணல் பாண்டியா(7), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(1), ஆயுஷ் பதோனி(4), ஜேசன் ஹோல்டர் (11) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் துஷ்மந்தா சமீராவும் மோசின் கானும் இணைந்து 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் அடித்த லக்னோ அணி, 154 ரன்களை பஞ்சாப் கிங்ஸுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
பஞ்சாப் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேஎல் ராகுல், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளுடன், துஷ்மந்தா சமீராவின் விக்கெட்டையும் ரபாடா வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான், பனுகா ராஜபக்ஷ ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சில சிக்சர்களை பறக்கவிட்டு அணிக்கு நம்பிக்கையளித்தனர்.
பின்னர் 18 ரன்களில் ஆட்டமிழக்க, 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோவும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிர்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now