ஐபிஎல் 2022: கொல்கத்தாவை பந்தாடியது லக்னோ!
லக்னோஅணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளயும் கொல்கத்தா இழந்து தோல்வி அடைந்தது.

IPL 2022: Lucknow Super Giants Thrash Kolkata Knight Riders By 75 Runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை லக்னெள அணி குவித்தது. அதிகபட்சமாக டி காக் 50 ரன்கள், தீபக் ஹூடா 41 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 15ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
லக்னோ அணியின் அவேஷ் கான், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலின் முதலாவது இடத்திற்கு லக்னோ முன்னேறியது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News