ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று தங்கள் அணியின் இலச்சினையை அறிமுகம் செய்தது.

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் நகரங்களை மையமாகக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நடப்பாண்டு வீரர்கல் ஏலமானது அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலமாக நடைபெறவுள்ளது. அதன்படி பிப்ரவரி 12, 13ஆகிய தேதிகளில் மெகா ஏலமானது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு புதிதாக இணையும் லக்னோ அணியானது கடந்த வாரம் தங்கள் அணியின் பெயரை அறிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த அணியின் இலச்சினையும் (Logo) இன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது லக்னோ அணியின் இலச்சினையானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now