
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் பக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை வாங்க ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு ரூபாயைக்கூட வீணடிக்காமல், மொத்த தொகையையும் துல்லியமாக செலவு செய்து வீரர்களை ஏலத்தில் எடுத்த ஒரே அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான்.
ஐபிஎல் கோப்பையை 2 முறை கேகேஆருக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி சார்பில் கம்பீர் கலந்துகொண்டார். ஐபிஎல்லில் கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்த கௌதம் கம்பீர், ஏலத்தில் மிகச்சிறப்பாக அந்த அணியை வழிநடத்தினார்.