
IPL 2022: Mayank, Dhawan's fifty helps PBKS post a total on 198/5 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதிலும் நடப்பு சீசனில் இதுவரை பெரிதாக சோபிக்காத மயங்க் அகர்வால் இன்றைய போட்டியின் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடினார்.