
ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
ராஜஸ்தாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல், பட்லர் ஆகியோர் களமிறங்கினர். படிக்கல் 15 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் சஞ்சு சாம்சன் களம்கண்டார். இருப்பினும் அந்த அணியில் பட்லரை தவிர யாருக்கும் நிலைத்து ஆடவில்லை. அபாரமாக விளையாடிய பட்லர் 52 பந்துகளில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. மறைந்த முன்னாள் ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவை கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி 'SW23' என அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சி அணிந்து இன்று விளையாடுகிறது.