Advertisement

ஐபிஎல் 2022: ஒரே ஓவரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது பாட் கம்மின்ஸ் ஓரே ஓவரில் 35 ரன்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

Advertisement
IPL 2022: Pat Cummins smashes Daniel Sams for 35 runs in 1 over
IPL 2022: Pat Cummins smashes Daniel Sams for 35 runs in 1 over (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 07, 2022 • 04:41 PM

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. இதில் நேற்று மும்பைக்கு எதிரான 
ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் அதிவேக அரைசதம் அடித்து இருக்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 07, 2022 • 04:41 PM

இதில் சாம்ஸ் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்கள் அடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது ஐபிஎல் பொறுத்தவரைக்கும் புதிய ரெக்கார்ட் அல்ல.

Trending

என்ன ஆச்சரியமா இருக்கா..? ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் எவ்வளவு ரன்கள் இதுவரைக்கும் அடிக்கப்பட்டு இருக்கு என்பதை தற்போது காணலாம்.

2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொச்சி அணிக்கு எதிரான லீக் ஆட்த்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 37 ரன்களை அதிகபட்சமாக விளாசி இருக்கிறது. பிரசாந்த் பரமேஸ்வரன் என்பவர் வீசிய அந்த ஓவரில் கெயில், 4 சிக்சர், 3 பவுண்டரி விளாசினார். இதில் ஒரு எக்ஸ்ட்ரா அடங்கும். இதில் பெங்களூரு அணி எளிதில் வென்றது.

2021ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஒரே ஓவரில் 37 ரன்களை விளாசினார். இதில் 1 பவுண்டரி , 5 சிக்சர், ஒரு எக்ஸ்ட்ரா ஆகும். இந்த ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். ஒரே ஓவரில் அதிக சிக்சர் விளாசிய ஐபிஎல் சாதனையை ஜடேஜா படைத்தார்.

நேற்று பாட் கம்மின்ஸ் விளாசிய 35 ரன்கள், 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. சாம்ஸ் வீசிய ஓவரில் 4 சிக்சர், 2 பவுண்டரி என கேகேஆர் அணிக்கு பாட் கம்மின்ஸ் இந்த பெருமையை பெற்று தந்துள்ளார். இதே போன்று மும்பை பந்துவீச்சாளர் ஒருவர், ஒரே ஓவரில் இத்தனை ரன்கள் கொடுத்தது இதுவே முதல் முறை.

இதே போன்று 2010ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் கெயில், மனோஜ் திவாரி ஜோடி 33 ரன்கள் விளாசியது. அந்த ஓவரை வீசியது ரவி போபாரா. எனினும் இந்தப் போட்டியில் கொல்கத்தா தோல்வியை தழுவியது. இதே போன்று 2014ஆம் ஆண்டு பர்வேந்தர் ஆவானா வீசிய ஓவரில் சிஎஸ்கே அணியின் ரெய்னா 33 ரன்கள் விளாசினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement