Advertisement

ஐபிஎல் 2022: போல்ட்டை தாக்கிய பந்து; வைரல் காணொளி!

பிரஷித் வீசிய பந்து, நடுவே நின்ற பந்து வீச்சாளர் போல்ட்டை பதம் பார்த்தது.

Advertisement
 IPL 2022: Prasidh Krishna hilariously throws the ball at bowler Trent Boult during KKR vs RR match
IPL 2022: Prasidh Krishna hilariously throws the ball at bowler Trent Boult during KKR vs RR match (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2022 • 12:50 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி கண்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2022 • 12:50 PM

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம்சன் 54 ரன்கள் எடுத்திருந்தார். கடைசியில், ஹெட்மயர் அதிரடி காட்ட, 150 ரன்களை ராஜஸ்தான் தாண்டியது.

Trending

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர்.

கடைசி கட்டத்தில், நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிறந்த முறையில் பார்ட்னர்ஷிப் அமைக்க, கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 48 ரன்கள் எடுத்திருந்தார். மறுபக்கம் 23 பந்துகளில், 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்திருந்த ரிங்கு சிங், ஆட்ட நாயகன் விருதினை பெற்றிருந்தார்.

தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து வந்த கேகேஆர், தற்போது வெற்றி பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும், இந்த போட்டிக்கு நடுவே நடுவர் எடுத்திருந்த சில முடிவுகளும், ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், போட்டிக்கு நடுவே நடந்த மற்றொரு சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தொடங்கிய பிறகு, 3 ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசி இருந்தார். இந்த ஓவரின் முதல் பந்தினை பாபா இந்திரஜித் எதிர்கொள்ள, அதனை மிட் ஆன் திசையில் அவர் அடித்து விட்டு வேகமாக ரன் ஓடினார்.

அப்போது, அங்கு நின்ற பிரஷித் கிருஷ்ணா, பந்தினை வேகமாகி எடுத்து நேராக ஸ்ட்ரைக்கர் திசையில் வீசி, ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால், பிரஷித் வீசிய பந்து, நடுவே நின்ற பந்து வீச்சாளர் போல்ட்டை பதம் பார்த்தது. அவரும் பந்து வரும் வேகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைத்து துள்ளி முடிவதற்குள், பந்து அவர் மீது பட்டு விட்டது.

 

இதனை பயன்படுத்தி மற்றொரு ரன்னையும் கொல்கத்தா அணி வீரர்கள் எடுத்து விட்டனர். இதன் காரணமாக, போல்ட் மீது பெரிய அளவில் காயம் ஒன்றும் ஏற்படவில்லை என தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகமாக வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement