
IPL 2022: Punjab Kings finishes off 187 on their 20 overs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் இணை களமிறங்கியது.
இதில் 18 ரன்களை எடுத்திருந்த கேப்டன் மயங்க் அகர்வால், மஹீஷ் தீக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.