
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் 2 போட்டிகள் நாளையும், நாளை மறுநாளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இந்த நிலையில், கொல்கத்தாவில் கன மழை பெய்து வருகிறது.
இந்த வாரம் முழுவதும் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கலக்கத்தில் உள்ள பிசிசிஐ இதுவரை மாற்று ஏற்பாட்டை செய்யவில்லை. போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவும் தற்போது நேரமில்லை.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ தவித்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களும் மழை பெய்ய கூடாது என்று வேண்டுதலில் ஈடுபடுகின்றனர். நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையரில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு வேலை இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.