
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 7 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய அஷ்வின், 9 பந்தில் 17 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். செம ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லரை 8 ரன்னில் ஜோஷ் ஹேசில்வுட் வீழ்த்தினார்.
சாம்சன் (27), டேரைல் மிட்செல் (16), ஹெட்மயர்(3) ஆகியோரும் சோபிக்காமல் போக, ஒருமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய ரியான் பராக், கடைசி 2 ஓவர்களில் பவுண்டரிகள், சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 144 ரன்கள் அடிக்க உதவினார். ரியான் பராக் 31 பந்தில் 56 ரன்கள் அடித்தார்.