
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த முறை புதிதாக 2 புதிய அணிகள் வரவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல பழைய அணிகளுக்கு வீரர்களை தக்கவைப்பதில் சில விதிமுறைகளும், புதிய அணிகளுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே உள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், குறைந்த பட்சம் 1 அயல்நாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதே போல ஏலத்தில் விடப்படும் வீரர்களை முன்கூட்டியே 2 புதிய அணிகளும் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வீரர்களை தக்கவைப்பதில் ரூ.48 கோடியையும் செலவு செய்ய ராஜஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது. அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் சஞ்சு சாம்சன் தக்கவைக்கப்படுகிறார். விதிமுறை படி அவருக்கு ரூ.16 கோடி வழங்கவேண்டும். ஆனால் ரூ.14 கோடிக்கே ராஜஸ்தான் அணி உடன்பாடு செய்துக்கொண்டுள்ளது.