
IPL 2022: Ravindra Jadeja Dedicated His Win As CSK Captain To His Wife (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார். ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து ஆடிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷபாஸ் அகமது 41 ரன் எடுத்தார். தொடர்ந்து 4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.