Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து விலகிய ஜடேஜா; மீண்டும் அணியை வழிநடத்தும் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா, மீண்டும் தனது கேப்டன் பதவியை மகேந்திர சிங் தோனியிடமே மீண்டும் கொடுத்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 30, 2022 • 19:48 PM
IPL 2022: Ravindra Jadeja Resigns From CSK Captaincy Mid Season, MS Dhoni To Lead Again
IPL 2022: Ravindra Jadeja Resigns From CSK Captaincy Mid Season, MS Dhoni To Lead Again (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும், அதாவது 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 

ஏனேனில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13ஆவது சீசனில் படுமோசமாக சொதப்பி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், அடுத்து 14ஆவது சீசனில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்றது. 

Trending


இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமுறைக்கு வழிவிட முடிவு செய்து மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம்  ஒப்படைத்தார்.

ஆனால் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது. தோனி பார்முக்கு திரும்பியுள்ள நிலையில் கேப்டன் ஜடேஜா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் படுமோசமாக சொதப்பி வருகிறார். 

அதன்காரணமாக தனது கேப்டன்சிப் பதவியை மீண்டும் மகேந்திர சிங் தோனியிடமே ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. 

தற்போது கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகிவிட்டதால், இனி வரும் போட்டிகளில்  அபாரமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கேப்டன்சி லெஜண்டான தோனியின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணி மீண்டும் ஏதெனும் மேஜிக்கை நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement