Advertisement

ஐபிஎல் 2022: சிஎஸ்கே கேப்டனாக மாறுகிறாரா  ஜடேஜா?

2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விட ரவீந்திர ஜடேஜா அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
IPL 2022 retention: Jadeja CSK’s first pick, MSD retained too
IPL 2022 retention: Jadeja CSK’s first pick, MSD retained too (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 01, 2021 • 12:07 PM

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 01, 2021 • 12:07 PM

புதிதாக வரும் அகமதாபாத், லக்னோ அணிகள் 2 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரருக்கு அதிகமாக தக்கவைக்க முடியாது. இந்த இரு அணிகளும் இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் வழங்க வேண்டும். 

Trending

ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் அதிகபட்சமாக 3 உள்நாட்டு வீரர்கள், அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். இந்த 4 வீரர்களுக்காக ரூ.42 கோடி செலவிடலாம். முதலில் தக்கவைக்கும் வீரருக்கு ரூ.16 கோடி, 2ஆவது வீரருக்கு ரூ.12 கோடி, 3ஆவது வீரருக்கு ரூ.8 கோடி, 4ஆவது வீரருக்கு ரூ.6 கோடி என ரூ.42 கோடி செலவிடலாம். 

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி, மகேந்திர சிங் தோனி, ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.

இதில் முதலில் தக்கவைக்கும் வீரர் என்ற அடிப்படையில் தோனியைக் தக்கவைக்காமல் ரூ.16 கோடிக்கு ரவிந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார். 2ஆவது தக்கவைப்பு வீரராக ரூ.12 கோடிக்கு எம்எஸ் தோனியும், மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் தலா ரூ.8 கோடியிலும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிஎஸ்கே வட்டாரங்கள் கூறுகையில் “ சிஎஸ்கே அணி சார்பில் தோனியைத்தான் முதலில் தக்கவைப்பு வீரராக வைக்க விரும்பம் தெரிவித்துள்ளன. ஆனால், தோனி அதை விரும்பவில்லையாம். அதனால்தான் ரவிந்திர ஜடேஜா முதலில் தக்கவைப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளன.

15-ஆவது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்பது தெரியாது. ஆனால், தக்கவைப்பு பட்டியலி்ல் ஜடேஜா இருப்பதால் அவரிடம் துணைக் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம். அல்லது தோனி வெளியிலிருந்து கொண்டு களத்தில் கேப்டனாக ரவிந்திர ஜடேஜா செயல்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், கடந்த சீசனில் தோனி பெரிதாக பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை. தோனியின் வழிகாட்டல் மட்டுமே அணிக்கு பெரிதாகத் தேவைப்படுகிறது, பேட்டிங் என்ற வகையில் அவரின் உதவி பல ஆட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக இல்லை என்பதால், முக்கியமான ஆட்டங்களுக்கு மட்டும் தோனி களமிறங்கி மற்ற ஆட்டங்களுக்கு ஜடேஜாவுக்க வழிவிடலாம் எனத் தெரிகிறது

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement