
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்த சீசனில் 3வது முறையாக முதல் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸூம் ரஜத் பட்டிதாரும் இணைந்து 105 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பட்டிதார் 38 பந்தில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 24 பந்தில் 33 ரன்கள் அடித்தார்.
ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார் ஃபாஃப் டுப்ளெசிஸ். 19வது ஓவரில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் 8 பந்தில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களை குவித்து மீண்டுமொரு முறை ஆர்சிபிக்காக முடித்து கொடுத்தார். க