
IPL 2022: RR skipper Samson hopes to ‘come back stronger’ after defeat against DC (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. அதைத்தொடர்ந்து இலக்கை விரட்டிய டெல்லி அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து 19வது ஓவரில் வெற்றி பெற்றது. .
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் குறைவான ரன்களைச் சேர்த்ததே எங்கள் தோல்விக்கு காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.