மறைந்த ஜாம்பவான் வார்னேவுக்கு ஐபிஎல் தொடர் சிறப்பு நிகழ்ச்சி!
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் தொடரில் பெரும் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, ஹோட்டல் அறையிலேயே உயிர் பிரிந்துள்ளது.
ஷேன் வார்னேவின் உடல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது. மேலும் புகழ்பெற்ற மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கான இறுதி மரியாதைகள் செய்யப்பட்டன. பல வீரர்களும் துக்கம் அனுசரித்தனர்.
Trending
இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் வார்னேவுக்கு மரியாதை செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் இந்த ஸ்பெஷல் ஏற்பாட்டை செய்கிறது. ராஜஸ்தான் மற்றும் மும்பை அணி வரும் ஏப்ரல் 30ஆம் தேதியன்று மோதுகிறது. இந்த போட்டியின் போது, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.
இந்த போட்டி மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில் தான் கடந்த 2008ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ஷேன் வார்னே ஐபிஎல் கோப்பையை வென்றுக்கொடுத்தார். எனவே அதே மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மற்றொரு ஸ்பெஷல் விஷயத்தையும் செய்துள்ளனர்.
அதாவது அன்றைய தினத்தில் ராஜஸ்தான் அணி வீரர்கள் தங்களது ஜெர்ஸி காலரில் ஷேன் வார்னேவை குறிக்கும் வகையில் "SW23" என பதிக்கவுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக வார்னேவின் சகோதரர் ஜேசன் வார்னே மும்பைக்கு வருகை தரவுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now