
IPL 2022: Ruturaj back in form; CSK post a total on 169 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா 3 ரன்களிலும், மொயீன் அலி ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் - அம்பத்தி ராயூடு ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தினர்.