ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட கெய்க்வாட்; இறுதிவரை நின்ற கான்வே!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஐபிஎல் தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 46ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டேவன் கான்வே இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர்பிளேவில் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டது.
Trending
அதன்பின் பவர்பிளே முடிவடைந்ததும் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் டேவன் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து டேவன் கான்வேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மேலும் இந்த சீசனில் அசுர வேகத்தில் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை சகட்டு மேனிக்கு பவுண்டரிகளை விளாசிதள்ளினர். அதிலும் உம்ரான் மாலிக் இந்த சீசனின் அதிவேக பந்துவீச்சான 154 கிமீ வேகத்தில் வீசிய பந்தினை ருதுராஜ் கெய்க்வாட் சிக்சருக்கு விரட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதன்பின் 99 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் தவறான ஷாட்டை தேர்வு செய்து புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.
அவரைத் தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் தோனி களமிறங்கினார். ஆனால் அவரும் 8 ரன்களுடன் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார். ஆனாலும் கான்வே அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவன் கான்வே 85 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now