
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், சென்னை அணி சூரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த பயிற்சி முகாமில் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக பங்கேற்காமல் பெங்ககளூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தார்.
இதனையடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் முழு உடல் தகுதி பெற்றதாக செய்திகள் வெளியானது. எனினும் சென்னை அணி நிர்வாகம் அவரை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே, பயிற்சியை தொடங்க அவருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ருத்துராஜ் பங்கேற்பாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், நேற்றைய பயிற்சி முகாமில் ருத்துராஜ் வலை பயிற்சியில் களமிறங்கிவிட்டதாக சிஎஸ்கே அணி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ருத்துராஜ், அணிக்கு திரும்பியதன் மூலம் சென்னை அணியின் பலம் அதிகரித்துள்ளது.