Advertisement

ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி!

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், விளையாடி உள்ள 10 போட்டிகளில் 7-இல் தோல்வியடைந்ததை அடுத்து தனது பிளே-ஆஃப் கனவை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

Advertisement
IPL 2022: Shot selection could have been better towards the end, feels CSK captain Dhoni
IPL 2022: Shot selection could have been better towards the end, feels CSK captain Dhoni (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 05, 2022 • 12:05 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டம் எம்எஸ் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. இதனைதொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் மிடில் ஆர்டர், பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 05, 2022 • 12:05 PM

கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் தோனி களத்தில் இருந்தார் .இதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர் .ஆனால் தோனி 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Trending

இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய மகேந்திரசிங் தோனி பேசுகையில், ‘‘பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தது. 170 ரன்கள் வரை மட்டுமே விட்டுக்கொடுத்தார்கள். இரண்டாவது பேட்டிங் செய்யும்போது, மைதானம் அதிகளவில் ஒத்துழைப்பு தரும் என்று தான் எண்ணியிருந்தேன். ஓபனர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், மிடில் வரிசையில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி, அடுத்தடுத்து விக்கெட்களை விட்டுக்கொடுத்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கிறேன்.

ரன்கள் எவ்வளவு தேவை என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை. விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடி இருந்தால், இறுதியில் இவ்வளவு ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்காது. தவறுகளையும், குறைகளையும் சரி செய்தாலே வெற்றி கிடைக்கும். வெற்றி பெற்றால் புள்ளி பட்டியல் அதன் பணியை செய்யும்'' என்று தோனி கூறினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement