
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. தற்போது 35 வயதான சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருந்தாலும், நடப்பாண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனையடுத்து சுரேஷ் ரெய்னா சிறிது வாரம் ஐபிஎல் வர்ணனையாளராக பணிபுரிநதார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஏதிலும் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் ஃபார்மில் இல்லை என்ற காரணத்தால் தான், அவரை எந்த ஐபிஎல் அணியும் மெகா ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.
ரெய்னாவிடம் இன்னும் கிரிக்கெட் விளையாட வயது இருக்கிறது. மேலும் கடந்த ஏலத்தில் தம்மை யாரும் எடுக்காததால் விரக்தி அடைந்துள்ள ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனை குறிவைத்து காய் நகர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியில தொடர்ந்து விளையாடி, அதில் தமது திறமையை நிரூபித்தால், ஐபிஎல் வாய்ப்பு தானாக வரும்.