
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச்(7) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(6) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்க, 4ம் வரிசையில் களமிறங்கிய சுனில் நரைன் 6 ரன்னுக்கு நடையை கட்டினார். சிறப்பாக ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்னிலும், ஷெல்டான் ஜாக்சன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அருமையாக பந்துவீசி வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் வீழ்த்தியிருந்த நிலையில், அரைசதம் அடித்த நிதிஷ் ராணாவை 54 ரன்னுக்கு வெளியேற்றினார். அதன்பின்னர் டெத் ஓவரில் அடித்து ஆடிய ஆண்ட்ரே ரசல் 25 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.