
கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் சரிவே மிஞ்சியது. இந்தாண்டு விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றது. தற்போதுதான் கம்பேக் கொடுத்துள்ளது.
ஆர்சிபிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அணியில் ஷிவம் தூபே, முகேஷ் சௌத்ரி, உத்தப்பா உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்முக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் ஒரு வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு எப்படி உள்ளது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று, - 0.745 என்ற ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ளன. அதில் 2 போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.