ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பெஹ்ரண்டோர்ஃப் - காணொளி!
லக்னோ அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஒரே ஓவரில் லக்னோ அணியின் இரண்டு முக்கியமான வீரர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
அதன்படி லக்னோ அண்யின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டிக் காக் - தீபக் ஹூடா இணை களமிறங்கினர். அப்போது ஆட்டத்தின் 3ஆவது ஓவரை வீசிய ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அந்த ஓவரின் முதல் பந்தில் 5 ரன்களை எடுத்திருந்த தீபாக் ஹூடாவின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
Trending
அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய பிரேராக் மன்கட் இப்போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே பெஹ்ரண்டோர்ஃபிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Mumbai Indians are on a roll with the ball with Jason Behrendorff scalping 2 early wickets!
— RevSportz (@RevSportz) May 16, 2023
At the end of Powerplay, Lucknow Super Giants are 35/2 #IPL2023 #LSGvMI pic.twitter.com/LqNU4IhYVt
இந்நிலையில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஒரே ஓவரில் லக்னோ அணியின் இரண்டு முக்கியமான வீரர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now