Advertisement

ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
IPL 2023 - Delhi Capitals vs Chennai Super Kings, Preview, Expected XI & Fantasy XI Tips!
IPL 2023 - Delhi Capitals vs Chennai Super Kings, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2023 • 11:55 AM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2023 • 11:55 AM

அந்தவகையில் இன்று நடைபெறும் 67ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக அணிக்கு மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சிஎஸ்கே 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படக்கூடும்.

டெல்லி கேப்பிட்டல்ஸை வெல்லும் பட்சத்தில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் நுழைவதை உறுதி செய்துவிடும். ஆனால் லீக் சுற்றை 2ஆவது இடத்துடன் நிறைவு செய்யுமா? அல்லது 3ஆவது இடத்துடன் நிறைவு செய்யுமா? என்பது இன்று இரவு கொல்கத்தாவில் நடைபெற உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மோதலின் முடிவில்தான் தெரிய வரும். ஏனெனில் லக்னோ அணியும் 15 புள்ளிகளுடன் உள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் சிஎஸ்கே ( 0.381)நிகர ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. லக்னோவின் ரன் ரேட் 0.304 ஆக உள்ளது.

அருண் ஜேட்லி மைதானத்தின் மெதுவான தன்மை சிஎஸ்கேவின் கள திட்டங்களுக்கு பொருந்தக்கூடும். இதை தோனி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்படக்கூடும். சிஎஸ்கேவின் பேட்டிங் வலுவாக உள்ளது. டாப் ஆர்டரில் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கிய ரஹானே ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். நடு ஓவர்களில் ஷிவம் துபேவும் அசத்துகிறார்.

எனினும் அவருக்கு உறுதுணையாக அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்துவது அவசியம். ஏனெனில் இவர்களிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. தோனி இன்னிங்ஸின் இறுதி நேரத்தில் சில கேமியோக்களை விளையாடி வருகிறார். பேட்டிங் வரிசையில் அவர், முன்னதாகவே களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றாலும் தோனி அதே பணியை தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுப்பவராக திகழ்கிறார். இறுதி பகுதியில் சிறப்பாக செயல்படுவதில் மதீஷா பதிரனா சீராக முன்னேற்றம் அடைந்து வருகிறார். சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா, மொயின் அலி, தீக்ஷனா ஆகியோர் டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு நடு ஓவர்களில் அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனில் கணிக்க முடியாத அணியாக உள்ளது.தொடரின் முதல் பாதியில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த டெல்லி அணியானது அடுத்த 8 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பதிவு செய்தது. 13 போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. இதனால் டெல்லி அணி அழுத்தம் இல்லாமல் விளையாடி வருகிறது.

பஞ்சாப் அணிக்கு எதிராக 213 ரன்களை விளாசி மிரளச்செய்திருந்தது. அந்த ஆட்டத்தில் ரைலீ ரூஸோவ் 37 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார். பிரித்வி ஷா அரை சதமும், டேவிட் வார்னர் 46 ரன்களும் சேர்த்து சிறந்த தொடக்கம் கொடுத்திருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். எனினும் இந்த சீசனில் அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 2இல் மட்டுமே வெற்றி கண்டது.

மெதுவான மற்றும் சீரற்ற ஆடுகளங்கள் காரணமாக இந்த சீசனில் சொந்த மைதானத்தில் எவ்வளவு ரன்கள் சேர்த்தால் போதுமானதாக இருக்கும், இலக்கை துரத்தும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய கணக்கீடுகளை டெல்லி கேப்பிட்டல்ஸ் சரியாக கணிக்க தவறியது. அக்சர் படேலின் சில கேமியோக்களைத் தவிர, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள மற்ற இந்திய வீரர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை.

டெல்லி அணியின் பேட்டிங் பெரும்பாலும் வார்னர், மிட்செல் மார்ஷ், பில் சால்ட்,ரீலி ரூஸோவ் ஆகியோரை சார்ந்தே இருந்து வந்துள்ளது. பிரித்வி ஷா 6 ஆட்டங்களில் விளையாடி 47 ரன்களே எடுத்திருந்தார். இதனால் தனது இடத்தை இழந்த அவர், தற்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் விளாசி மீண்டுள்ளார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, கலீல் அகமது, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 18
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 10

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிலீ ருஸ்ஸோ, ஃபில் சால்ட், அக்ஷர் படேல், அமன் ஹக்கிம் கான், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே (கேப்டன்), பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், ரிலே ரூசோ, ஷிவம் துபே, ரிதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மிட்செல் மார்ஷ், அக்ஷர் படேல் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - துஷார் தேஷ்பாண்டே, மதிஷ பத்திரன

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement