Advertisement

ஐபிஎல் 2023: தொடரிலிருந்து அவரசமாக விலகிய லிட்டன் தாஸ்!

குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக ஐபிஎல் 16வது சீசனிலிருந்து விலகி வங்கதேசத்துக்கு சென்றுவிட்டார் கேகேஆர் வீரர் லிட்டன் தாஸ்.

Advertisement
IPL 2023: Litton Das had to return to Bangladesh due to an urgent family medical emergency!
IPL 2023: Litton Das had to return to Bangladesh due to an urgent family medical emergency! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 28, 2023 • 07:23 PM

ஐபிஎல் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர் அணிகள் வெற்றி தோல்விகளை மாறி மாறி பெற்றுவருகின்றன. இந்த சீசன் பெரும்பாலான அணிகளுக்கு அதிருப்தியளிக்கும் சீசனே ஆகும். அதற்கு காரணம், நிறைய பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாதது தான்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 28, 2023 • 07:23 PM

ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தீபக் சாஹர் ஆகிய அந்தந்த அணிகளின் முக்கியமான வீரர்கள் சிலர் காயத்தால் இந்த சீசனில் விளையாடவில்லை. வெளிநாட்டு வீரர்கள் பலரும் காயத்தால் விலகினர். பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இருந்தும் அவரால் ஆடமுடியவில்லை. ஜோஷ் ஹேசில்வுட் ஆர்சிபி அணிக்காக இதுவரை விளையாடவில்லை. 

Trending

இந்நிலையில், இந்த சீசனின் முதல் சில போட்டிகள் முடிந்த பின், கேகேஆர் அணியுடன் இணைந்த வங்கதேச விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் ஜேசன் ராயுடன் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் அந்த ஒரு போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அதன்பின்னர் அவர் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அவரது குடும்பத்தில் ஒரு மருத்துவ அவசரம் என்பதால் ஐபிஎல்லில் இருந்து விலகி வங்கதேசத்திற்கு சென்றுவிட்டார் லிட்டன் தாஸ். லிட்டன் தாஸை மினி ஏலத்தில் ரூ.50 லட்சத்திற்கு எடுத்தது கேகேஆர் அணி. அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும், கட்டாயம் தேவை என்ற சூழலில் பயன்பட்டிருப்பார். இதனால் இது கேகேஆர் அணியின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement