Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
IPL 2023 - Lucknow Super Giants vs Royal Challengers Bangalore, Preview, Expected XI & Fantasy XI Ti
IPL 2023 - Lucknow Super Giants vs Royal Challengers Bangalore, Preview, Expected XI & Fantasy XI Ti (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2023 • 01:03 PM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றிபெற்றதுள்ளதால், அத்தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆர்சிபி அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2023 • 01:03 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

கேல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக 257 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஆனால் அதே போன்று லக்னோ ஆடுகளத்தில் ரன் எடுப்பது சிரமம். இங்கு நடந்த குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 136 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 128 ரன்னில் சரண் அடைந்ததே அதற்கு சான்று.

ஆனாலும் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதால் கூடுதல் உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள். மார்கஸ் ஸ்டோய்னிஸ், கைல் மேயர்ஸ், கேப்டன் ராகுல் நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆட்டத்தில் விரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் ஸ்டோனிஸ் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை அவர் ஆட முடியாமல் போனால் குயின்டான் டி காக் இடம் பெறலாம்.

அதேபோல் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையில் உள்ளது. பெங்களூரு அணியில் பொறுப்பு கேப்டன் விராட் கோலி (333 ரன்), ஃபாஃப் டு பிளெசிஸ் (422 ரன்), கிளென் மேக்ஸ்வெல் (258 ரன்) ஆகியோர் தான் பேட்டிங்கில் ஆணிவேராகும்.

மற்ற வீரர்கள் யாரும் மூன்று இலக்கத்தை கூட தொடவில்லை. எனவே இந்த மூவரின் மட்டையடியை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் அமையும். ஏற்கனவே சொந்த ஊரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு 212 ரன் குவித்த போதிலும் அந்த இலக்கை லக்னோ அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த தோல்விக்கு அவர்களது இடத்தில் பழிதீர்க்கும் முனைப்புடன் பெங்களூரு படை ஆயத்தமாகி வருகிறது. காயத்தில் இருந்து மீண்டு விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 01

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேல் ராகுல் (கே), கைல் மேயர்ஸ், ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், ஆவேஷ் கான், யஷ் தாக்கூர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, வைஷாக் விஜய் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், கேஎல் ராகுல்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கைல் மேயர்ஸ், வனிந்து ஹசரங்க, க்ருனால் பாண்டியா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், ரவி பிஷ்னோய்.

கேப்டன்/துணைகேப்டன் - விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸ், கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement