Advertisement

ஐபிஎல் 2023: சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பிரஷித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

Advertisement
IPL 2023: Rajasthan Royals Name India Pacer As Prasidh Krishna's Replacement
IPL 2023: Rajasthan Royals Name India Pacer As Prasidh Krishna's Replacement (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 27, 2023 • 05:22 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்க இருக்கிறது. 74 போட்டிகளை கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன . இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்திலேயே ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். ரிஷப் பந்த் முதல் ஸ்ரேயாஸ் ஐயர் வரை காயம் காரணமாக அணியிலிருந்து விலகி இருப்பது அவர்களது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 27, 2023 • 05:22 PM

சென்னை அணியை சார்ந்த முகேஷ் குமார் மற்றும் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல்  தொடரிலிருந்து விலகி இருந்தார்.

Trending

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரஷித் கிருஷ்ணா இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தற்போது இவருக்கான மாற்று வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் தேர்வு செய்துள்ளனர். பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அனுபவம் மிக்க பந்துவீச்சாளரான சந்தீப் ஷர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் தேர்வு செய்துள்ளனர். 

கடந்த சீசன்களில் இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மிகச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் சந்தீப் சர்மா. இவரை தற்போது பிரஷித் கிருஷ்ணாவிற்கு மாற்ற ஆட்டக்காரராக தேர்ந்தெடுத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம். 

இவர் தற்போது அணியுடன் இணைந்து இருக்கிறார். பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக 104 போட்டிகளில் விளையாடி இருக்கும் சந்தீப் சர்மா 114 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த எகானெமியை வைத்துள்ள பந்துவீசாளராகவும் சந்தீப் சர்மா உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement