Advertisement

எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - மைக்கேல் ஹஸ்ஸி!

டெல்லி அணிக்கு எதிராகவும் எப்போதும் போல் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 10, 2023 • 15:16 PM
IPL 2023: Shivam Dube, a unique talent, says CSK batting coach Mike Hussey
IPL 2023: Shivam Dube, a unique talent, says CSK batting coach Mike Hussey (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

Trending


அப்போது பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை திருப்தி அளிக்கிறது. டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் கீழே இருக்கிறது. ஆனால் இரண்டு வெற்றிகளை பெற்றால் அவர்கள் மேலே வரும் சூழல்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கிறது. டெல்லி கடைசியாக விளையாடியுள்ள 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று இருக்கிறது.

எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. டெல்லி அணிக்கு எதிராகவும் எப்போதும் போல் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். சில பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இதற்காக தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். ஷிவம் துபே மிகவும் திறமையான பேட்ஸ்மேன். அவர் பந்தை சிக்சருக்கு அடிக்கும் விதம் அபாரமானது. கடந்த சீசனில் அவரது பங்களிப்பு தெளிவில்லாமல் இருந்தது. 

ஆனால் இந்த சீசனில் டோனியும், பிளமிங்கும் அவருக்கென பிரத்யேகமான ஒரு பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் அவர் ஆட வேண்டும் என்பதே அணியின் திட்டம். ஷிவம் துபேயும் அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். இதே போல கான்வே, ரகானே ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement