ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசித்த ஆப்பிள் சிஇஓ!
டெல்லி கேப்பிட்டல் - கொல்கத்தா நைட ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டியை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் நேரில் கண்டுகளித்தார்.

IPL 2023: Tim Cook Spotted At DC vs KKR Match After Apple Store Launch In Delhi (Image Source: Google)
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியையையும் பதிவுசெய்து அசத்தியது. இந்த போட்டியை பார்ப்பதற்கு ஆப்பிள் சிஇஓ டிம் குக் வருகை தந்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு நேரில் வருகை தந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சோனம் கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து , “டிம் குக் மற்றும் ஆப்பிள் குழு முழுவதும் – நீங்கள் இங்கே ஒரு அழகான தங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் அளித்த அக்கறை மற்றும் கவனத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்துள்ள டிம் குக் ட்விட்டரில், “மறக்க முடியாத ஒரு மாலைப்பொழுதை தந்தமைக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். மேலும், நேற்று முன்தினம் இந்தியாவில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் தொடங்கியது. இதனை ஆப்பிள் சிஇஓ டிம் குக் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Thank you so much for an unforgettable evening! https://t.co/JNGdbt6QnJ
— Tim Cook (@tim_cook) April 20, 2023
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News