
கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் உரிமைகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கையில் தான் இருந்தன. டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் வசம் இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது. மொத்தம் ரூ. 20,500 கோடி கொடுத்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து பெற்றுக்கொண்டது.
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ரசிகர்கள், ஹாட்ஸ்டார் செயலியில் மட்டுமே காண முடிந்தது. அதுவும் குறிப்பிட்ட பணம் செலுத்தி இருந்தால் தான் பார்க்க முடியும். இதனாலேயே பல ரசிகர்கள் போட்டியை நேரலையில் பார்க்க முடியாமல் மறுநாளை ஹைலைட்ஸுகளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்காகவே இலவசம் கொடுத்துள்ளது வியாகாம் நிறுவனம். அதாவது ஜியோ செயலி மூலம் இனி இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியை நேரலையாக ரசிகர்கள் பார்க்கலாம் என முடிவெடுத்துள்ளது. குறிப்பாக தமிழ், ஆங்கிலம், போஜ்பூரி உள்ளிட்ட 11 மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டு ஒளிபரப்ப்பு இருக்கும் எனக்கூறப்படுகிறது.